செய்திகள் இளவரசி டயானா திருமண கேக்கின் ஒரு துண்டு ஏலத்தில் விற்பனை!…

இளவரசி டயானா திருமண கேக்கின் ஒரு துண்டு ஏலத்தில் விற்பனை!…

இளவரசி டயானா திருமண கேக்கின் ஒரு துண்டு ஏலத்தில் விற்பனை!… post thumbnail image
லாஸ் ஏஞ்சல்ஸ்:-இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -இளவரசி டயானா திருமணம் கடந்த 1981ஆம் ஆண்டில் நடைபெற்றது. 33 வருடங்கள் கழிந்த நிலையில் இந்த திருமணத்திற்காகத் தயார் செய்யப்பட்ட கேக்கின் ஒரு துண்டு கடந்த வியாழக்கிழமை அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நேட் டி சாண்டர்ஸ் என்ற ஏல நிறுவனத்தாரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இன்னமும் அதனுடைய ஒரிஜினல் சில்வர் மற்றும் வெள்ளை கலர் பரிசுப்பெட்டியில் மெழுகுத்தாள் கொண்டு மூடப்பட்டிருந்த அந்த கேக் 1375 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.அந்தப் பெட்டியில் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியின் வாழ்த்துகள் என்று எழுதப்பட்டிருந்த ஒரு அட்டையும் காணப்பட்டது. இந்த கேக்கினை வாங்கியவர் ஒரு தனியார் சேகரிப்பாளர் என்று ஏல நிறுவனத்தின் தகவல் தொடர்பாளரான சாம் ஹெல்லர் குறிப்பிட்டார். அப்படியே அதன் அசல் வடிவத்திலேயே இருந்தபோதும் இதனை சுவைத்துப் பார்ப்பது என்பது நல்ல யோசனையாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

மேலும் இதுபோன்று வெளியிடப்படும் அரச குடும்பத்தின் கேக் வகைகளை வாங்கி சேகரிப்பதற்கென்று ஒரு அர்ப்பணிப்பு நிறைந்த குழுவினர் உள்ளனர் என்றும், இவர்களில் சிலர் 1840ஆம் ஆண்டில் ராணி விக்டோரியாவின் திருமணத்தின்போது வெளியிடப்பட்ட கேக்குகளைக் கூட வாங்கி சேகரிப்பில் வைத்துள்ளனர் என்றும் ஹெல்லர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி