செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் அஞ்சான் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…

6.சதுரங்க வேட்டை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த சதுரங்க வேட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 16 ஷோவ்கள் ஓடி ரூ.83,616 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.வேலையில்லா பட்டதாரி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சென்னையில் மொத்தம் 44 ஷோவ்கள் ஓடி ரூ.2,67,520 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.ஜிகர்தண்டா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த ஜிகர்தண்டா திரைப்படம் சென்னையில் மொத்தம் 112 ஷோவ்கள் ஓடி ரூ.9,89,450 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி:-
கடந்த வாரம் வெளியான ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ.17,14,650 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.கதை திரைக்கதை வசனம் இயக்கம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 164 ஷோவ்கள் ஓடி ரூ.18,44,384 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு முன்னேறியது.
1.அஞ்சான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த அஞ்சான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 428 ஷோவ்கள் ஓடி ரூ.80,49,888 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி