ஐஸ்வாளி குளியல் நிதி உதவி 100 பில்லியன் டாலரை கடந்தது!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-லூ கெரிக்ஸ் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு நிதி திரட்டித் தரும்விதமாக கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கிய ஐஸ் வாளிக் குளியல் என்ற சவால் நிகழ்ச்சி இதுவரை 100 மில்லியன் டாலர் நிதி உதவியினைக் கடந்துள்ளது.கடந்த மாதம் 29ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 29ஆம் தேதி முடிய நன்கொடையாக இந்த நிதியினைத் திரட்டியுள்ளது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதே தேதிகளில் வசூலான தொகை 2.8 மில்லியன் டாலர் என்பதுவும் இவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பொழுதுபோக்கு விளையாட்டின் வெற்றி இதில் பங்கேற்ற விளையாட்டு, அரசியல் மற்றும் வர்த்தகப் பிரபலங்களால் விரைவாகப் பரவியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி என்ற வார்த்தை இந்த உதவிக்கு ஈடு செய்யப் போதுமானதாக இருக்காது என்று ஏஎல்எஸ் அமைப்பின் தலைவரும், முக்கிய நிர்வாக அதிகாரியுமான பார்பரா நியுஹவுஸ் தெரிவித்தார். இந்த நிதி உதவியானது நோய் குறித்த தீவிர ஆராய்ச்சிக்கும், நோய்த்தாக்கம் பெற்றவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆதரவுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: