செய்திகள்,திரையுலகம் நடிகை ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!… குழந்தைகளுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ அட்வைஸ்!…

நடிகை ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!… குழந்தைகளுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ அட்வைஸ்!…

நடிகை ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!… குழந்தைகளுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ அட்வைஸ்!… post thumbnail image
மும்பை:-பிரபல பாலிவுட் கதாநாயகி ராணி முகர்ஜியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மர்தானி’ என்ற இந்திப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது.இந்தப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான், ‘மர்தானி’ படத்தில் வன்முறை மற்றும் விரும்பத்தகாத காட்சிகளும், கொச்சையான வசனங்களும் இடம்பெற்றுள்ளதால் குழந்தைகள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ‘சத்யமேவ் ஜயதே’ டி.வி. தொடர் நிகழ்ச்சியின்போது கருத்து கூறிய அமீர்கான், கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நான் ‘மர்தானி’ படத்தை பார்த்த வகையில் அதில் ஏராளமான வன்முறைக் காட்சிகள் வருகின்றன.ராணி முகர்ஜியை நான் மிகவும் மதிக்கிறேன். எனது கருத்துக்கு மாறுபாடான கருத்து அவருக்கு இருக்கக்கூடும். எனினும், வன்முறையின் தாக்கம் இல்லாமல் வளர வேண்டும் என்பதால் இந்தப் படத்தை குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி