செய்திகள்,திரையுலகம் டோக்கியோ திரைப்பட விழாவில் ‘தூம்-3’!…

டோக்கியோ திரைப்பட விழாவில் ‘தூம்-3’!…

டோக்கியோ திரைப்பட விழாவில் ‘தூம்-3’!… post thumbnail image
மும்பை:-அமீர்கான் நடிப்பில் வெளியான படம் தூம்-3. இப்படத்தில் அமீர்கான் ஹீரோ ரோல் ஏற்றிருந்தார். கத்ரீனா கைப் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்களுடன் அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது.

இந்நிலையில் இப்படம் டோக்கியோ திரைப்பட விழாவிற்கு செல்கிறது. அக்டோபர் மாதம் ஜப்பானின், டோக்கியோ நகரில் நடக்கும் டோக்கியோ திரைப்பட விழாவில் தூம்-3 படமும் திரையிடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக அமீர்கான் டோக்கியோ செல்ல இருக்கிறார். கூடவே தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து சென்று அங்கேயே, இந்தாண்டு தனது மனைவியின் பிறந்தநாளையும் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி