செய்திகள்,திரையுலகம் இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..

இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..

இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!.. post thumbnail image
சென்னை:-பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் நண்பன் படத்தில் நடித்தார்.நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்தான் ஷங்கர் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் விஜய்க்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையிலும் நட்பு உண்டு.

அதன்காரணமாக, சமீபத்தில் தனது 51வயது பிறந்த நாளையொட்டி ஐ படக்குழுவினருக்கு பார்ட்டி கொடுத்த ஷங்கர். விஜய்யையும அழைத்திருந்தாராம். கத்தி பிரச்சினை காரணமாக சிம்புதேவன் இயக்கும் படத்தில்கூட நடிப்பதை இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும் விஜய், அழைத்தது ஷங்கர் என்பதால் மறுபேச்சின்றி கலந்து கொண்டாராம்.

மேலும், விஜய்யிடம் பெரிய அளவில் நட்பு வளர்க்காத விக்ரம், அந்த பார்ட்டியின்போது அவரிடம் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தாராம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் சிம்பு, தனுசுடன் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்த விஜய், இந்தமுறை விக்ரமுடன் நீண்ட நேரம் பேசி நட்பு வளர்த்துள்ளார். இந்தமாதிரி பார்ட்டி சந்திப்புகள் மூலம் விஜய்யின் நட்பு வட்டாரங்கள் அதிகரித்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி