செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டு போட்டிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தகுதி!…

ஆசிய விளையாட்டு போட்டிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தகுதி!…

ஆசிய விளையாட்டு போட்டிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தகுதி!… post thumbnail image
புதுடெல்லி:-ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி மற்றும் வீரர், வீராங்கனைகள் தேர்வு பாட்டியலாவில் நடைபெற்று வந்தது. பயிற்சி போட்டியின்போது அபாரமாக விளையாடிய மேரி கோம், சோனியாவை முதலில் வீழ்த்தினார். அதன்பின்னர் பிங்கி ஜங்ராவையும் வென்றார். இதனால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்றார்.

இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய மேரி கோம், இதற்காக கடினமாக உழைத்திருப்பதாகவும், நிறைய தியாகம் செய்திருப்பதாகவும் கூறினார். ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நல்லாதரவால் இந்த பயிற்சி போட்டிகளில் வெற்றி பெற முடிந்ததாகவும் அவர் கூறினார்.5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், லண்டனில் 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

அதன்பின்னர் பித்தப்பை அறுவை சிகிச்சை, மற்றும் 3-வது ஆண் குழந்தை பிறந்ததையடுத்து நீண்ட காலம் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அதன்பின்னர் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர் இப்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி