விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘லிங்கா’ படத்தின் போஸ்டர்!…

விளம்பரங்கள்

சென்னை:-கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ரஜினியின் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் நடந்து வருகிறது. இதுவரை இப்படம் தொடர்பாக எந்த ஒரு ஸ்டில்லும் வெளியாகவில்லை.

இந்நிலையில் லிங்கா படத்தின் அதிகாரப்பூர்வமான முதல் போஸ்டரை வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட இருக்கின்றனர். லிங்கா போஸ்டர், விநாயகர் சதுர்த்தி அன்று காலையிலேயே வெளியாகும், போஸ்டர், மோஷன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது என ஸ்ரீதர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: