இசையமைப்பாளர் இமானின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-விமலுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.இப்படவிழாவில் பிரியா ஆனந்த் தனது நீண்டநாள் ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். அதாவது, பிரியா ஆனந்த்துக்கு நீண்டநாளாக டி.இமானின் கொழுக் மொழுக் கன்னத்தை பிடித்து கிள்ளவேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். இதை தனது படக்குழுவினருடன் சொல்லி வந்திருக்கிறார்.

அவருடைய இந்த ஆசையை படவிழாவில் இயக்குனர் ஞாபகப்படுத்த, பிரியா ஆனந்தும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று விழா மேடையிலேயே டி.இமானின் கன்னத்தை பிடித்து சுச்சும்மா, பிச்சுக்குட்டி, செல்லக்குட்டி என்று கிள்ளி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.இதனால் வெட்கத்தில் தலைகுனிந்த டி.இமானின் மனதுக்குள் சந்தோஷம் துளிர்விட்டாலும், இன்று வீட்டுக்கு சென்றால் மனைவியிடம் உதை வாங்குவது உறுதி என விழா மேடையிலேயே தனது பயத்தையும் வெளிப்படுத்தினார். பிரியா ஆனந்த்தின் இந்த கொஞ்சலால் விழாவுக்கு வந்திருந்த நடிகர்கள் சற்று பொறாமையுடன் திகைத்து நின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: