செய்திகள்,திரையுலகம் 36 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் வெளிவரும் ‘சங்கராபரணம்’!…

36 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் வெளிவரும் ‘சங்கராபரணம்’!…

36 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் வெளிவரும் ‘சங்கராபரணம்’!… post thumbnail image
சென்னை:-1979ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. கே.விஸ்வநாத் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி நடித்திருந்தனர்.

தற்போது இந்தப் படத்தை ஸ்ரீசபரிகிரி வாசன் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் பி.எஸ்.ஹரிகரன், டி.பி.செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் இணைந்து நவீன முறையில் டிஜிட்டல் மயமாக்கி வருகிறார்கள். அதோடு பாடல்களை ஆரோ 3டி சவுண்ட் சிஸ்டம் மூலம் மெருகேற்றுகிறார்கள். அதோடு இதனை தமிழிலும் டப் செய்கிறார்கள். அடுத்த மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்தி தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி