செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் மும்பையில் விநாயகர் சிலைகளுக்கு ரூ.259 கோடி காப்பீடு!…

மும்பையில் விநாயகர் சிலைகளுக்கு ரூ.259 கோடி காப்பீடு!…

மும்பையில் விநாயகர் சிலைகளுக்கு ரூ.259 கோடி காப்பீடு!… post thumbnail image
மும்பை:-விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகளை தெருக்களில் வைத்து பூஜை செய்வார்கள். பின்னர் 5 நாட்கள் கழித்து அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

மும்பையில் ஐ.எஸ்.பி. சேவா மண்டல் அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் தெருக்களில் பூஜைக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். தெருக்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு ஆபரணங்களும் அணிவிக்கப்படுகின்றன.இந்நிலையில் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் அமைப்பு தங்கள் விநாயகர் சிலைகளுக்கு ரூ.259 கோடிக்கு காப்பீடு எடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி நடைபெறும் 5 நாட்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.விநாயகர் சிலை, அதில் அணிவிக்கப்பட்டுள்ள ரூ.22 கோடி மதிப்பிலான ஆபரணங்கள், சிலை வைக்கப்பட்டுள்ள மண்டபம், விநாயகரை வழிபட வரும் பக்தர்களுக்கு தீ விபத்து, தீவிரவாத தாக்குதல், வன்முறையால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்குவது என அனைத்துக்கும் சேர்த்து இந்த காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குவதில் இருந்து ஆபரணங்களை மீண்டும் வங்கி லாக்கருக்கு கொண்டு செல்வது வரை 5 நாட்களுக்கு இந்த காப்பீடு செல்லுபடியாகும். தேசிய மயமாக்கப்பட்ட காப்பீடு நிறுவனத்தில் இந்த காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சத்துக்கும் மேல் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.இதற்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழாவின் போது லால்பகுச்சா ராஜா மண்டல் அமைப்பு ரூ.51 கோடிக்கு காப்பீடு செய்ததே அதிகபட்ச காப்பீட்டு தொகையாக இருந்தது. இதற்காக ரூ.12 லட்சம் பிரீமியம் செலுத்தினார் தற்போது அதிகபட்சமாக ரூ.259 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி