செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!…

பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!…

பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியா வந்த பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி நேற்று முன்தினம் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதலை சந்தித்தார். அப்போது இந்தியாவில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான தங்கள் நிறுவன திட்டங்கள் மற்றும் முதலீடு குறித்து இந்திரா நூயி ஆலோசனை நடத்தினார்.அப்போது குளிர்பானங்களில் சர்க்கரை அளவை மேலும் குறைக்க வேண்டும், அதனால் சுகாதார அம்சங்கள் முறையாக கவனிக்கப்படும் என்றும் பெப்சிகோ நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், சர்க்கரை அளவை குறைப்பது பற்றி பெப்சிகோ நிறுவனம் உடனடியாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.இந்தியாவில் நடுத்தர வகுப்பினரின் வருமானம் அதிகரித்து வரும் நிலையில், அவர்களிடம் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் துரித உணவு அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்த் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கால் பதித்த பெப்சி நிறுவனம், தற்போது 38 குளிர்பான தொழிற்சாலைகள் மற்றும் 3 உணவு தயாரிப்பு ஆலைகளுடன் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி