செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்தான் ரியல் ஹீரோ!… பிரபல நடிகை புகழாரம்…

நடிகர் விஜய்தான் ரியல் ஹீரோ!… பிரபல நடிகை புகழாரம்…

நடிகர் விஜய்தான் ரியல் ஹீரோ!… பிரபல நடிகை புகழாரம்… post thumbnail image
சென்னை:-ஜென்டில்மேன், அழகன், ரோஜா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை மதுபாலா. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்ட அவர்,வாய் மூடி பேசவும என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் எனறு எந்தவித கண்டிசனும் போடாமல், டைரக்டர்கள் கொடுக்கிற எந்த மாதிரியான வேடங்களிலும் நடிப்பேன் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார் மதுபாலா.

இந்நிலையில, அவர் அளித்த பேட்டி ஒன்றில், தமிழில் எனக்கு பிடித்தமான ஒரே ஹீரோ விஜய் மட்டுமே என்று கூறியுள்ளார். அவர் நடிக்கிற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதோடு நிஜவாழ்க்கையிலும் ஏழை மக்களுக்கு நிறைய உதவிகள் செய்கிறார். அந்த வகையில் நான் விஜய்யை ரியல் ஹீரோவாகத்தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி