செய்திகள்,திரையுலகம் ஜாக்கிசானைத் தொடர்ந்து சென்னைக்கு விஜயம் செய்யும் ஹாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அர்னால்டு!…

ஜாக்கிசானைத் தொடர்ந்து சென்னைக்கு விஜயம் செய்யும் ஹாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அர்னால்டு!…

ஜாக்கிசானைத் தொடர்ந்து சென்னைக்கு விஜயம் செய்யும் ஹாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அர்னால்டு!… post thumbnail image
சென்னை:-ஜாக்கிசான் மற்றும் அர்னால்ட் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் நடித்த பெரும்பாலான படங்களை தமிழ்நாட்டில் டப் செய்து வெளியிட்டு வந்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அதனால் அவருக்கும், ஹாலிவுட் நடிகர்களுக்குமிடையே நல்லதொரு நட்பு இருந்து வருகிறது. அதனால்தான், தசாவதாரம் படத்தின் ஆடியோ விழாவுக்கு ஜாக்கிசானையே சென்னைக்கு அழைத்து வந்து விழாவை பிரமாண்டப்படுத்தினார்.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்எமிஜாக்சனை வைத்து தான் தயாரித்துள்ள ஐ படத்தின் ஆடியோ விழாவை செப்டம்பர் மாதம் நடத்த திட்டுமிட்டுள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், அந்த விழாவில் இன்னொரு ஹாலிவுட் நடிகரான அர்னால்டை அழைத்து வரவும் திட்டமிட்டிருக்கிறாராம். அதற்கான முயற்சிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி