செய்திகள்,முதன்மை செய்திகள் ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் முடங்கியது!…

ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் முடங்கியது!…

ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் முடங்கியது!… post thumbnail image
புதுடெல்லி:-ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தையொட்டி ஆகஸ்ட் 27ம்தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது.

ஏர் இந்தியாவின் இணையதளம் மூலமாக மட்டுமே இந்த டிக்கெட்டுகளை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகையை பெறும் வகையில் ஏராளமானோர் ஏர் இந்தியா இணையதளத்தை இன்று தொடர்பு கொண்டதால் அது முடங்கிப்போனது. தற்போது இந்த இணையதளத்தை யார் தொடர்பு கொண்டாலும், தடங்கலுக்கு வருந்துகிறோம். நீங்கள் தொடர்பு கொள்ளும் இந்த இணையதளம் தற்போது உபயோகத்தில் இல்லை அல்லது இந்த இணையதளம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்ற தகவல்தான் வெளியாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி