செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விஜேந்தர் சிங் விலகல்!…

ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விஜேந்தர் சிங் விலகல்!…

ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விஜேந்தர் சிங் விலகல்!… post thumbnail image
புதுடெல்லி:-கிளாஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது மூக்கில் காயமடைந்த விஜேந்தர் சிங், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். காயம் குணமடையாததால், பாட்டியாலாவில் நடைபெற்ற பயிற்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பதால் ஆசிய போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற விஜேந்தர் இறுதிச்சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டனி பாவ்லருடன் மோதினார். இப்போட்டியில் எதிராளியின் மூர்க்கமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாக் அவுட் ஆன விஜேந்தர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி