திருமணத்தை தட்டிக்கழிக்கும் நடிகர்கள் விஷால்-ஆர்யா!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர்கள் விஷால், ஆர்யா இரண்டு பேரும் உயிர் நண்பர்களாக உள்ளனர்.இந்நிலையில், ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருவதாக அவரே ஒரு மேடையில் தெரிவித்தார். ஆனால் அவருக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லையாம். நயன்தாரா அவரது வாழ்க்கையில் இருப்பதாக கருதி யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்களாம்.

அதனால் இப்போது அதுபற்றி ஆர்யாவிடம் கேட்டால், அந்த விசயத்தை சொல்லாமல், என் நண்பன் விஷால் திருமணம் செய்து கொண்டபிறகுதான் என் திருமணம் நடக்கும். அதனால் அவரது திருமணத்திற்காகத் தான் நான் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.இந்த தகவலை விஷாலிடம் சொன்னால், ஆர்யா திருமணத்திற்கு பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்ள போவதாக எப்போதோ முடிவு செய்துவிட்டேன். என் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோதும், ஆர்யாவுக்கு முதலில் திருமணம் நடக்கட்டும் என்று நான் காத்திருக்கிறேன் என்கிறார் விஷால். ஆக ஒருவர் மேல் ஒருவர் பழியை போட்டுவிட்டு எதற்காக இப்படி திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள் என்பது தெரியவிலலை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: