செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…

சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!…

சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது!… post thumbnail image
புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் கணக்கு விவரங்களை சட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தர மறுக்கிறது.

இருப்பினும் அங்குள்ள வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்கள் பட்டியல் ஒன்றை கடந்த நிதி ஆண்டில் சி.பி.டி.டி. என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியம் சேகரித்துள்ளது.இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100-க்கும் மேற்பட்டோரை தொடர்பு கொண்டு, அவர்கள் தங்கள் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை தந்து விட்டால், அவர்கள் மீது வரி ஏய்ப்பு சட்டத்தின்படிதான் நடவடிக்கை எடுக்கப்படும், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்தவர்கள் என்ற வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படாது என கூறி தகவல்கள் திரட்டுமாறு வருமான வரித்துறைக்கு சி.பி.டி.டி. கூறி உள்ளது.இந்த 100 பேர் பட்டியலில் சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்தவர்களின் பெயர் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி