செய்திகள்,முதன்மை செய்திகள் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டில் பலியான 20 பேரின் உடல்கள் கோலாலம்பூர் போய் சேர்ந்தன!…

மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டில் பலியான 20 பேரின் உடல்கள் கோலாலம்பூர் போய் சேர்ந்தன!…

மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டில் பலியான 20 பேரின் உடல்கள் கோலாலம்பூர் போய் சேர்ந்தன!… post thumbnail image
கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), கடந்த மாதம் 17ம் தேதி, 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. வழியில் உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் அந்த விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் அந்த விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியானார்கள். இந்த சம்பவம், உலகமெங்கும் அதிர்வலைகளையும், துயரத்தையும் ஏற்படுத்தியது.முதல் கட்டமாக அவர்களில் 20 பேரின் உடல்கள், நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூர் போய் சேர்ந்தன. விமான நிலையத்தில் இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியின்போது, பலியானவர்களின் உடல்களைப் பார்த்து குடும்பத்தினர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். மலேசிய மன்னர் அப்துல் கலிம், பிரதமர் நஜிப் ரசாக் அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தனர்.
இதையொட்டி நாடு முழுவதும் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி