செய்திகள்,திரையுலகம் திருட்டு விசிடியை தடுக்க நேரடியாக களம் இறங்கிய பார்த்திபன்!…

திருட்டு விசிடியை தடுக்க நேரடியாக களம் இறங்கிய பார்த்திபன்!…

திருட்டு விசிடியை தடுக்க நேரடியாக களம் இறங்கிய பார்த்திபன்!… post thumbnail image
சென்னை:-பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன். யாரும் திருட்டு விசிடி போடாதீங்க அப்படி போட்டா உங்களுக்கு ஆண்டவன் மரண அடி கொடுப்பான் என்ற பார்த்திபன் விளம்பரம் செய்தார். உருக்கமான வேண்டுகோள் வைத்தார். ஆனால் அதையெல்லாம் மீறி படத்தின் திருட்டு விசிடி 30 ரூபாய்க்கு தாரளமாக கிடைக்கிறது. இதனால் நொந்து போன பார்த்திபன் படத்தின் வெற்றி சந்திப்பின் போது அந்த திருட்டு விசிடியை காண்பித்து இப்படி பேசினார்.

கோடி கணக்கில் செலவு செய்து பல நூறு பேர் உழைத்த உழைப்பை இப்படி 30 ரூபாய்க்கு ரொட்டி மாதிரி விற்கிறாங்க. நம்மை சுற்றி இருக்கிற ஆந்திரா, கேரளா, கன்னடத்துல திருட்டு விசிடி கிடையாது. இங்கு மட்டும்தான் கிடைக்குது. எல்லா அரசுகிட்டேயும் முறையிட்டுவிட்டோம். எல்லா போலீசுகிட்டேயும் முறையிட்டு விட்டோம் ஆள்தான் மாறிக்கிட்டிருக்காங்களே தவிர திருட்டு விடிசி மாறல. கன்னடத்துல திருட்டு விசிடி விற்றால் ஒரு அமைப்பின் தலைவர் கடையை தேடிப்போயி உதைக்கிறார். அது மாதிரி நாமும் வன்முறையில இறங்கினாத்தான் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும்னு தெரியுது நாளைக்கே நான் களத்துல இறங்கப்போறேன் என்று பேசினார்.

பேசின மாதிரி மறுநாள் பார்த்திபன் தன் உதவியாளர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சென்னை நகரை சுற்றினார். பாரிமுனை பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள சில கடைகளுக்கு உதவியாளர்களை அனுப்பி வாடிக்கையாளர்போல நடித்து தன் படத்தின் விசிடியை கேட்க வைத்தார். அதில் 2 கடைகளில் அவரிடன் பட சி.டி கிடைத்து. உடனே அந்த கடைக்குள் சென்ற பார்த்திபன் அங்குள்ள சிடிக்களை அள்ளிக் கொண்டு போலீசுக்கு போன் செய்தார். விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரை கைது செய்து சிடிக்களையும் கைப்பற்றினர். இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் தொடரும் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி