செய்திகள்,திரையுலகம் சைத்தானாக மாறும் பிரபல இசையமைப்பாளர்!…

சைத்தானாக மாறும் பிரபல இசையமைப்பாளர்!…

சைத்தானாக மாறும் பிரபல இசையமைப்பாளர்!… post thumbnail image
சென்னை:-இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.தற்போது அவர் நடித்து வரும் சலீம் படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது. இதில் தெலுங்கு நடிகை அக்ஷரா ஹீரோயின்.

தன் சாவு நாளை தெரிந்து கொள்ளும் ஒருவன் ஒரு நாள் தான் விரும்பியபடி வாழ நினைக்கிறான். எப்படி வாழ்க்கிறான் என்கிற கதை. பாரதிராஜாவின் உதவியாளர் நிர்மல்குமார் இயக்கி உள்ளார். ஸ்ரீகிரீன் கார்பரேஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
இதற்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் பணிகள் தொடங்கி விட்டது.

சுஷ்மா ஹீரோயின். செல்வராகவன் உதவியாளர் ஆனந்தராஜ் இயக்குகிறார். இதையும் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். இதனை தீபாவளியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு சைத்தான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஹாலிவுட் ஸ்டைலில் தயாராகும் திகில் படம். விஜய் ஆண்டனி மனநல டாக்டராக நடிக்கிறார். மற்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி