செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…

செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…

செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!… post thumbnail image
லண்டன்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. அவற்றில் ஒரு படத்தில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. படத்தைப் பார்த்த நிபுணர்கள் இந்த யூகத்தை வெளியிட்டுள்ளனர்.

டைனோசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டன. டைனோசருக்கும் முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள் கருதுகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கு இதுவே சாட்சி என்று ஆன்லைன் பத்திரிகை ஒன்றில் ஒருவர் கட்டுரை எழுதி உள்ளார்.

6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, சிறு கோளின் தாக்குதலால், பூமியில் இருந்த பாறைகள், செவ்வாய் கிரகத்துக்கு வீசி எறியப்பட்டு இருக்கலாம் என்று கடந்த ஆண்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதை வைத்து பார்க்கும்போது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்க முடியும். எனவே, ‘ரோவர்’ விண்கலம் எடுத்த படத்தில் இருப்பது விலங்குகளின் எலும்பாக இருக்க வாய்ப்புள்ளதாகவே நம்பப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி