செய்திகள்,திரையுலகம் செப்டம்பரில் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு!…

செப்டம்பரில் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு!…

செப்டம்பரில் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் கடந்த இரண்டு வருடங்களாக உருவாகி வருகிறது. முற்றிலும் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்று சொன்னாலும் பல மாதங்களாக சென்னையில், பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு அதில் எமி ஜாக்சன் மட்டும் நடனமாடும் ஒரு பாடல் காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள்.

ஆனால், அது இதுவரை படமாக்கப்படவில்லையாம். இயக்குனர் ஷங்கருக்கும், எமி ஜாக்சனுக்கும் இடையே சண்டை உருவானதால் அவர் அந்தப் பாடலை படமாக்காமல் வைத்திருக்கிறார் என்கிறார்கள். எமி ஜாக்சன் அவருடைய படு கவர்ச்சியான புகைப்பபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதுதான் ஷங்கரின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள். கடந்த வாரம் கூட ஒரு நீச்சல் உடை புகைப்படத்தை எமி ஜாக்சன் டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்கள் ‘ஐ’ படத்தின் இமேஜை பாதிக்கும் என ஷங்கர் கருதுவதாகச் சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி