செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்க விமானத்தை வழிமறித்த சீனப் போர் விமானம்!…

அமெரிக்க விமானத்தை வழிமறித்த சீனப் போர் விமானம்!…

அமெரிக்க விமானத்தை வழிமறித்த சீனப் போர் விமானம்!… post thumbnail image
வாஷிங்டன்:-சீன கடற்பகுதியின் மேல் உள்ள சர்வதேச வான் எல்லை வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பயிற்சிக்கு சென்ற அமெரிக்க போர் விமானத்தை ஆயுதமேந்திய சீனப் போர் விமானம் வழிமறித்த சம்பவம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகானை ஆவேசம் அடையச் செய்துள்ளது.

அமெரிக்க விமானத்துக்கு மிகவும் நெருக்கமாக சுமார் 50-100 அடி இடைவெளியில் அச்சுறுத்துவது போல் ஆயுதமேந்திய சீனப் போர் விமானம் 3 முறை வழிமறித்ததாகவும், ஒரு முறை சீன விமானத்தின் வயிற்றுப் பகுதியை அமெரிக்க போர் விமானத்துக்கு காட்டியபடி, தனது ஆயுத பலத்தை நிரூபிக்க சீனப்போர் விமானி முயன்றதாகவும், இது ஏற்கத்தகுந்த செயல் அல்ல, இது தொடர்பாக சீன அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் பெண்ட்டகனின் மூத்த செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

இத்தகைய செயல்கள் பாதுகாப்பானதும், தொழில் ரீதியானதும் அல்ல. மாறாக, சீனாவுடன் நாங்கள் வைத்துக் கொள்ள விரும்பும் ராணுவ தரப்பிலான உறவுகளுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி