செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘அஞ்சான்’ படத்துக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது!… அதிரடி தகவல்…

‘அஞ்சான்’ படத்துக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது!… அதிரடி தகவல்…

‘அஞ்சான்’ படத்துக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது!… அதிரடி தகவல்… post thumbnail image
சென்னை:-சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி தயாரித்து இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளிவந்தது. கொடூர கொலைகளும், கவர்ச்சி பாடல்களும் நிறைந்த இந்தப் படத்துக்கு யூ சான்றிதழ் கொடுத்தது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. அஞ்சான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ அதிகாரிகள் கோர்ட்டில் தகவல் அளித்துள்ளனர்.

சினிமா படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய தணிக்கை குழு வாரிய தலைவர் ராகேஷ்குமார் சமீபத்தில் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று அவர் மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகளிடம் ராகேஷ்குமார் வாங்கிய லஞ்சத்தின் விபரங்களை அளித்தனர். அதில் தமிழ் படமான அஞ்சானும், அதன் தெலுங்கு பதிப்பான சிக்கந்ததரும் இடம் பெற்றிருந்தது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோர்ட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: தமிழ் நாட்டில் தற்போது அஞ்சான் என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து ஒரு லேப்டாப், மற்றும் ஐபேட் ஒன்றினை பரிசாக பெற்றுள்ளார். அஞ்சான் படம் ஜூலை மாதம் 24ம் தேதி ராகேஷ் குமார் பார்வைக்கு அனுப்பப்பட்டது அவர் 6 நாட்கள் தன் கையில் படத்தை வைத்துக் கொண்டு அதன் பிறகே பார்த்துள்ளார். அதன் பிறகு ஆகஸ்ட் 6ம் தேதி சான்றிதழ் வழங்கி உள்ளார். அதேபோன்று ஆகஸ்ட் 9ந் தேதி சிக்கந்தர் என்ற தெலுங்கு படத்திற்கு சான்றிதழ் வழங்க 50 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்ததாக சி.பி.ஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி