விஜய்- முருகதாஸை நான் எதற்காக எதிர்க்க வேண்டும் – சீமான்!…

விளம்பரங்கள்

சென்னை:-ஈழத்தமிழர்களுக்கு எதிராக யார் படமெடுத்தாலும் அதற்கு முதல் நபராக எதிர்ப்பு குரல் கொடுப்பவர் சீமான். ஆனால், கத்தி விசயத்தில் அவர் பேக் அடித்து விட்டார் என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக இருந்தது. அதோடு, புலிப்பார்வை படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் இருப்பதாக பலரும் கூறிவரும் நிலையில் அப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் சீமான். அப்போது விழா அரங்கத்திற்குள்ளேயே அடிதடி சம்பவங்களும் அரங்கேறின.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பத்திரிகையாளர்களை அழைத்து தனது நிலையை தெளிவுபடுத்தினார் சீமான். அப்போது அவர் பேசுகையில், கத்தி படம் எப்போதோ தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் படம் முடிகிற நேரத்தில் இந்த பிரச்னை விஸ்வரூமெடுத்திருக்கிறது. மேலும் என்னைப்பொறுத்தவரை லைகா நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் நானும் அதை எதிர்க்கிறேன்.

ஆனால், விஜய், முருகதாஸை எதற்காக நான் எதிர்க்க வேண்டும்.அதோடு கத்தி படத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இருந்தால் அதற்கு நானே எதிர்ப்பு தெரிவிப்பேன். ஆனால் இங்கிருப்பவர்களுக்கு கோபம் லைக்கா நிறுவனத்தின் மீதா? இல்லை நடிகர் விஜய் மீதா? என்றே எனக்கு புரியவில்லை. இப்படி சொன்ன சீமான், புலிப்பார்வை படத்தை பார்த்த நான் அதில் சில காட்சிகளை நீக்குமாறு கூறியிருக்கிறேன். ஆனால் அந்த படத்தை ஆதரிப்பதாக நான் சொல்லவே இல்லை என்றும் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: