நடிகை சமந்தாவை சமாதானப்படுத்துவாரா மகேஷ் பாபு!…

விளம்பரங்கள்

சென்னை:-தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பர் நடிகை சமந்தா. அவர் அஞ்சானில் நீச்சல் உடையில் நடித்தது தெலுங்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஆச்சரியமாகவே உள்ளதாம். இவ்வளவு ஓபனாக அவர் நடிப்பாரா என சமந்தாவிற்கு வாய்ப்புகளை அள்ளி வழங்க தயாராக உள்ளாராம்.

ஆனால், இந்த நீச்சல் உடை விவகாரத்தால் மகேஷ் பாபுவின் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து கமெண்ட்டுகளை அள்ளி வருகிறார் சமந்தா. முன்னர் மகேஷ் பாபுவின் படத்தின் போஸ்டரைப் பார்த்து சமந்தா கமெண்ட் அடித்ததன் விளைவுதான், இந்த பதில் கமெண்ட்டுகள். மகேஷ் பாபுவும், சமந்தாவும் விருது வழங்கும் விழா ஒன்றில் ராசியாகி விட்டாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லையாம். தமிழ்நாட்டில் ‘அஞ்சான்’ படத்தைப் பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டபடி கமெண்ட் அடித்துத் தள்ளிக் கொண்டிருக்க, ஆந்திராவிலோ சமந்தாவை கமெண்ட்டுகளால் கண்ணீர் விட வைத்து வருகிறார்களாம்.

மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அடிக்கும் கமெண்ட்டுகளை, மகேஷ் பாபுவே நிறுத்தச் சொன்னால்தான் உண்டு என்கிறார்கள். ரசிகர்களைக் கட்டுப்படுத்தி, சமந்தாவை சமாதானப்படுத்துவாரா மகேஷ் பாபு என்பதே தற்போது அங்குள்ள கேள்வியாக இருக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: