இன்னும் 33 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் – இஸ்ரோ தகவல்!…

விளம்பரங்கள்

சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்தப் பயணம் வெற்றிகரமாக தொடர்கிறது. ‘ஐ.எஸ்.டி.என்.’ என்று சொல்லப்படுகிற இந்திய விண்வெளி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி இந்த விண்கலத்தின் பயணத்தை ‘இஸ்ரோ’ கண்காணித்து வருகிறது.

தற்போது விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து 90 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இன்னும் 33 நாட்களில் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து இஸ்ரோ சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது :-
செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கள்யான் விண்கலம் பூமியில் இருந்து 1890 லட்சம் கிலோமீட்டர் தூரத்த்தில் விண்கலம் உள்ளது.செவ்வாய் கிரகத்தில் இருந்து 90 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னும் 33 நாட்களில் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும்.இந்திய விஞ்ஞானிகள் வரும் ஆகஸ்டு மாதம் முதல் பகுதியில் 3-வது திருத்தம் செய்வதற்கு ‘இஸ்ரோ’ திட்டமிட்டது பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டனர் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: