செய்திகள்,திரையுலகம் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை கசிந்தது!…

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை கசிந்தது!…

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை கசிந்தது!… post thumbnail image
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஐ’. இப்படத்திற்காக விக்ரம் தன் முழு உழைப்பையும் கொடுத்து நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார்.இப்படத்தின் கதை நீண்ட நாட்களாக வெளிவராத நிலையில், தற்போது ஒன் லைன் மட்டும் கசிந்துள்ளது. எல்லோரும் சொல்வது போல் இது விளையாட்டுத்துறை பற்றிய கதை இல்லையாம்.

சாதாரண மனுஷன் அமானுஷ்ய சக்தி பெற்றவனாக மாறி என்ன செய்கிறான் என்கிற கதை. அது மாய மந்திரமோ, தெய்வ சக்தியோ அல்ல, விஞ்ஞான ரீதியாக கிடைக்கும் அமானுஷ்ய சக்தி.
இதை பயன்படுத்தி சீயான் செய்யும் அட்டகாசம் தான் படத்தின் ஹைலட்டாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி