விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய் நடித்த ‘கத்தி‘ படத்தை ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களாகவே குற்றம் சாட்டப்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களாக அது பற்றிய பேச்சு அதிகமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் கருணாகரனுடன் இணைந்து பல அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். ஆனால், மாணவர் அமைப்புகள் படத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சமீபத்தில் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவரான வேல்முருகன் தலைமையில் கூடிய தமிழ் ஆர்வலர்களின் கூட்டமைப்பு ‘கத்தி, புலிப்பார்வை’ படங்களை வெளியிடவே கூடாது என்ற போராட்டத்தில் தீவிரமாக இறங்கப் போவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து ‘புலிப் பார்வை’ குழுவினர் படத்தில் சில காட்சிகளை நீக்கவும், சில காட்சிகளை மாற்றவும் சம்மதித்து விட்டது. இந்தப் படத்திற்கு எதிர்ப்பு என்பது படத்தின் சில பல காட்சிகளில்தான். அவற்றை சரி செய்துவிடலாம் என படக்குழு நம்புகிறது.ஆனால், கத்தி படத்தைத் தயாரித்ததே தவறு என போராட்டக் குழுவினர் சொல்கிறார்கள்.

‘கத்தி’ படத்தின் சமரச முயற்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது. சீமான் மட்டுமே ‘கத்தி’ படத்தை எதிர்க்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அவரை முற்றிலும் ஓரம் கட்டி விட்ட தமிழ் ஆர்வலர்கள் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.இதனிடயே ‘கத்தி’ படத்தை பிரச்னைக்குரிய லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திலிருந்து வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றி விட்டு, போராட்டக் குழுவினரை அமைதிப்படுத்திவிடலாம் என தயாரிப்புக் குழுவினர் நினைக்கிறார்களாம். இது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: