லிங்காவில் ‘நான் ஈ’ பட புகழ் சுதீப்!…

விளம்பரங்கள்

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்க பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘லிங்கா’. ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பமாகி தொடர்ந்து ஹைதராபாத்தில் சில மாதங்களாக நடைபெற்றது. தற்போது கர்நாடகாவில் மீண்டும் நடைபெற்று வருகிறது.

படத்தில் மெயின் வில்லனாக தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபு நடிக்கிறார். தற்போது கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘நான் ஈ’ புகழ் சுதீப் நடிக்கப் போகிறாராம். சில நிமிடங்களே வரும் காட்சிதான் என்றாலும் அந்தக் காட்சியில் நடிப்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்குமென்பதால் ஒரு முன்னணி நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களாம். அதனால்தான் அதில் சுதீப்பை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: