மாயமான எம்.எச்.370 மலேசிய விமான பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு!…

விளம்பரங்கள்

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்குக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. நீண்ட தேடுதலுக்கு பின்னும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், அதில் பயணம் செய்த பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து அதிக அளவிலான பணம் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுசம்பந்தமாக மலேசிய போலீசார் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 4 பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து சுமார் 35 ஆயிரம் டாலர்கள் வரை திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.பயணிகளின் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பரிமாற்றம் செய்ததற்காக எச்.எஸ்.பி.சி. வங்கி அதிகாரி நூர் சிலா கனான் மீது 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவரது கணவர் அகமது மௌலா சாகுல் ஹமீது மாயமான மலேசிய விமான பயணியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததற்காக 4 குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.இந்த பணம் பாகிஸ்தானை சேர்ந்த அலி பரான் கான் என்பவரது வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.மேலும், இந்த திருட்டில் மலேசியாவில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கி அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் போலீசார் விசாரணையை உஷார்படுத்தியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: