பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் சென்ராயன்!…

விளம்பரங்கள்

சென்னை:-தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத்தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து அனைவராலும் பாராட்டப்பெற்றார்.

இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இம்மாதம் 31ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: