கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…

விளம்பரங்கள்

சென்னை:-பூமணி, பூந்தோட்டம், மிட்டா மிராசு உள்பட சில படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். 8 ஆண்டுகளுக்கு பிறகு கருங்காலி என்றொரு படத்தை இயக்கிய நாயகனாக நடித்த அவர், அஞ்சலியை நாயகியாக வைத்து ஊர்சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி நடித்து வந்தார். அந்த நேரம் பார்த்து சித்தி பாரதி தேவியுடன் ஏற்பட்ட மோதலில் களஞ்சியத்தின் மீதும் புகார்களை அள்ளி வீசிவிட்டு ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்தார் அஞ்சலி. அதனால் களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்த அஞ்சலி பின்னர் நடிக்காமல் தொடர்ந்து டேக்கா கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஆந்திராவில் நடைபெற்ற ஒரு நண்பரின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்றிருக்கிறார் மு.களஞசியம். அப்போது அவருடன் டிரைவர் மற்றும் இரண்டு உதவி இயக்குனர்களும் உடனிருந்தார்களாம். திருமணம் முடிந்ததும் அவர்கள் சென்னைக்கு மதியம் திரும்பியிருக்கிறார்கள். அப்போது ஆந்திராவிலுள்ள ஓங்கல் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென் நிலைதடுமாறி கார் விபத்துக்குள்ளானதாம்.

இந்த விபத்தில், அருண் என்ற டிரைவர் இறந்து விட்டாராம். அவர் அருகில் முன் சீட்டில அமர்ந்திருந்த களஞ்சியத்துக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம். பின் சீட்டில் அமர்ந்திருந்த இரண்டு உதவி இயக்குனர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர்கள் மூன்று பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: