இணையத்தில் பரவும் நடிகை ஹன்சிகாவின் ஐஸ் பக்கெட் குளியல் வீடியோ!…

விளம்பரங்கள்

சென்னை:-அமெரிக்காவில் ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்படும் நரம்பு சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரபலங்களிடம் நன்கொடை வசூலிப்பதற்கு ஜில்லென்று இருக்கும் ஒரு பாக்கெட் ஐஸ் தண்ணீரில் குளியல் போட வேண்டும்.

இவ்வாறு குளியல் போட்டால் 10 டாலர் மட்டும் நன்கொடை வழங்கலாம். மாறாக குளியல் போட மறுத்து பின்வாங்கினால் 100 டாலர் நன்கொடை தரவேண்டும். இந்த சவாலை ஏற்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், மைக்ரோ சாப்ட்வேர் கம்பெனி நிறுவனர் பில்கேட்ஸ் போன்றோர் துணிச்சலாக ஐஸ் தண்ணீர் குளியல் போட்டுள்ளனர்.அதிபர் ஒபாமா குளியல் போட மறுத்து பின்வாங்கிவிட்டதால் 100 டாலர் நன்கொடை வழங்கியதாக தெரிகிறது. மேலும், ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், நடிகர் டிவைன் ஜான்சன் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி, இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், நடிகைகள் மந்திரா பேடி, சோனாக்ஷி சின்ஹா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரும் இந்த ஐஸ் தண்ணீர் குளியல் போட்டுள்ளனர்.

தமிழ் நடிகை ஹன்சிகா மோத்வானி மட்டுமே இந்த ஐஸ் தண்ணீர் குளியல் போட்டுள்ளார். அவர் தனது நண்பர்களுக்கு இந்த சேலஞ்சை விடுத்துள்ளார். இவர் ஐஸ் தண்ணீர் குளியல் போட்ட வீடியோ இணையதளத்தில் தற்போது சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: