அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…

மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…

மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்… post thumbnail image
வாஷிங்டன் :- இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே மோடி பிரதமரானால் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்போம் என்று தொடர்ந்து தாங்கள் கூறி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேரி ஹார்ப் கூறியுள்ளார். மோடியுடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்யவேண்டும் என்று நியுயார்க்கில் உள்ள சீக்கிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹார்ப், மக்களில் ஒருவர் அளித்துள்ள மனுவை போலத்தான் நாங்கள் அதைப் பார்க்கிறோம் என்று மேலும் கூறினார்.

2005ல் அமெரிக்காவுக்கு வர மோடிக்கு வழங்கிய விசாவை திடீரென அந்நாட்டு அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இதற்கு குஜராத்தில் 2002ல் ஏற்பட்ட கலவரம் தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது அமெரிக்காவே வலிய வந்து மோடிக்கு விசா வழங்கவேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு வரும் மோடியை வரவேற்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி