சர்வதேச டென்னிஸ் முதல் சுற்று: சானியா ஜோடி வெற்றி…

விளம்பரங்கள்

நியூஹவன் :- அமெரிக்காவின் நியூஹவன் நகரில் கனெக்டிகட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6–7 (3–7), 7–6 (7–2), 10–7 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா– கிறிஸ்டினா பிலிஸ்கோவா இணையை சாய்த்தது.

இந்த வெற்றியை ருசிக்க சானியா கூட்டணி 1 மணி 57 நிமிடங்கள் செலவழிக்க வேண்டி இருந்தது. முன்னதாக ஒற்றையர் 2–வது சுற்றில் 2–ம் நிலை வீராங்கனை ருமேனியாவின் சிமோனா ஹலேப் 2–6, 6–4, 3–6 என்ற செட் கணக்கில் 68–ம் நிலை வீராங்கனை சுலோவக்கியாவின் மாக்டலினா ரைபரிகோவாவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: