செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் விஷாலை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்…!

மீண்டும் விஷாலை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்…!

மீண்டும் விஷாலை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்…! post thumbnail image
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘பாண்டியநாடு’. இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார். மதி ஒளிப்பதிவை செய்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இக்கூட்டணி மீண்டும் புதிய படத்தின் மூலம் இணையவுள்ளது.

விஷால் தற்போது ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இன்னும் கிளைமாக்ஸ் காட்சியையும், 2 பாடல்களை மட்டுமே படமாக்கவுள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியை ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா துறைமுகத்தில் படமாக்க உள்ளனர். ஒரு பாடல் காட்சிக்காக ஸ்விட்சர்லாந்து செல்லவிருக்கின்றனர். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதன்பிறகு விஷால், சுந்தர்.சி இயக்கும் ஆம்பள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சுசீந்திரன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். சுசீந்திரன் தற்போது விஷ்ணு நடிப்பில் ‘ஜீவா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இதன்பிறகு விஷாலை வைத்து இயக்குகிறார் சுசீந்திரன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி