செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் உலகநாயகன் கமல் நடிக்கும் படத்துக்கு நட்சத்திரங்கள் தேர்வு…

உலகநாயகன் கமல் நடிக்கும் படத்துக்கு நட்சத்திரங்கள் தேர்வு…

உலகநாயகன் கமல் நடிக்கும் படத்துக்கு நட்சத்திரங்கள் தேர்வு… post thumbnail image
மோகன்லால், மீனா மலையாளத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். ஜீது ஜோசப் இயக்கினார். இப்படத்தை வெங்கடேஷ், மீனாவை நடிக்க வைத்து தெலுங்கில் ஸ்ரீப்ரியா இயக்கினார். அங்கும் இப்படம் ஹிட்டானது. இதையடுத்து தமிழில் ‘திரிஷ்யம்’ ரீமேக் செய்யப்படுகிறது. மோகன்லால் கேரக்டரில் கமலஹாசன் நடிக்கிறார். ஜீது ஜோசப்பே தமிழ் பதிப்பையும் இயக்குகிறார். இப்படத்துக்கான இதர நடிகர், நடிகை தேர்வு நடந்தது.

மீனா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கவுதமி தேர்வாகியுள்ளார். கமல், கவுதமி மகள்களாக இருவர் நடிக்கின்றனர். 17 வயது நிரம்பிய மூத்த மகள் கேரக்டரக்கு நிவேதா தாமசை தேர்வு செய்துள்ளனர். இவர் ‘ஜில்லா’ படத்தில் விஜய் தங்கையாக நடித்தவர். இவர் கேரக்டர்தான் கதையின் திருப்பமாகும்.

இன்னொரு மகளாக 8 வயது குழந்தை கேரக்டரில் நடிக்க எஸ்தர் தேர்வாகி உள்ளார். கலாபவன் மணி வில்லன் கேரக்டரில் வருகிறார். பெண் போலீஸ் அதிகாரியாக ஆஷா சரத் வருகிறார். ‘திரிஷ்யம்’ படத்தில் இதே கேரக்டரில் ஆஷா சரத்துதான் நடித்து இருந்தார். தெலுங்கு பதிப்பில் இந்த கேரக்டரில் நதியா நடித்தார்.

நடிகர், நடிகைகள் தேர்வு முடிந்துள்ளதால் விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். ‘திரிஷ்யம்’ தமிழ் பதிப்புக்கு ‘பாபநாசம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. திருநெல்வேலியை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி