செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இமான் இசையில் பாடல் பாடிய பிரபல பாடகர்…!

இமான் இசையில் பாடல் பாடிய பிரபல பாடகர்…!

இமான் இசையில் பாடல் பாடிய பிரபல பாடகர்…! post thumbnail image
பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ‘ஜீவா’. இப்படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா மற்றும் சுரபி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஏற்கனவே விஷ்ணு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் ‘ஜீவா’ படத்தின் ஒளிப்பதிவை மதி கவனிக்கிறார். டி.இமான் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் மதன் கார்க்கியின் பாடல் வரிகளை சமீபத்தில் அந்தோணிதாசன் பாடினார். அதேபோல் தற்போது இமான் இசையில் ‘எங்கே போனாய்…’ என்ற உணர்ச்சிபூர்வமான பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி