நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல – பாகிஸ்தான்

விளம்பரங்கள்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் வற்புறுத்தி இருந்தார்.

இதுபற்றிய கேள்விக்கு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் பதில் அளித்ததாவது:-

பாகிஸ்தான், இந்தியாவின் அடிமை அல்ல. பாகிஸ்தான், இறையாண்மை உடைய நாடு. காஷ்மீர் பிரச்சினையில் சட்டப்பூர்வ பங்குதாரர்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் தூதர் தலையிடவில்லை. ஹூரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது, இது முதல்முறை அல்ல. பல்லாண்டுகளாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும், காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. அது, சர்ச்சைக்குரிய பகுதி. அதுபற்றிய ஐ.நா. தீர்மானங்கள் நிறைய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: