அமெரிக்காவில் மாயமான பிரபல மாடல் அழகி…!

விளம்பரங்கள்

நியூயார்க் :- சூடானிய மாடல் அழகியான அடுயி டெங் ஹோப்கின்ஸ் கடந்த 2004-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு வந்தார். கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து நியூயார்க் நகரில் வசித்துவந்த இவர் உலகின் முன்னணி வடிவமைப்பாளர்கள் அனைவருடனும் பணியாற்றி வந்துள்ளார்.

தனது கிராப் தலை அலங்காரத்திற்கும், கருப்பு நிறத்திற்கும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட டெங் புரோயென்சா ஷூலர், சக் போசென், கேத்தரின் மலென்ட்ரினோ, சோபி தியலெட், டெசிகுயல் மற்றும் பிபூ மகோபத்ரா போன்ற பிரபல வடிவமைப்பாளர்களின் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.

இந்த மாதம் 6-ம் தேதியன்று கடைசியாக இவர் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் காணப்பட்டார் என்றும், அதன்பிறகு அவரைப் பற்றிய விபரங்கள் ஒருவருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது. இவரைப் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு தேடுதல் பணியும் துவங்கப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர காவல்துறை அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: