செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!… post thumbnail image
சென்னை:-சாதாரண பஸ் கண்டெக்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, பல்வேறு கஷ்டங்கள், போராட்டங்களை கடந்து சென்னைக்கு வந்தார். 1975-ஆண்டில் பாலசந்தரின், அபூர்வ ராகங்கள் படம் மூலம் தன் சினிமா கேரியரை ஆரம்பித்தார் ரஜினி. ஏற்கனவே சிவாஜிகணேசன் என்றொரு நடிகர் தமிழ் சினிமாவில் இருந்ததால், சிவாஜிராவ் என்ற பெயர் அவருக்கு சரிவராது என்று ரஜினிகாந்த் என்றும் மாற்றி வைத்தார் பாலசந்தர். முதல் படத்திலேயே ரசிகர்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்ததால், அவரது நடிப்புக்கு வரவேற்பு ஏற்பட்டது.

பின்னர் சில படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, அதையடுத்து ஹீரோவாக அவதரித்தார். ரஜினியின் ஸ்டைலை பார்த்து சில படங்களிலேயே அவருக்கென்று ஒரு தனி பாணி உருவாகியதால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார். அப்போது முதல் இப்போது வரை சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். கருப்பு – வெள்ளை காலம் தொடங்கி இப்போது 3டி அனிமேஷன் வரை வளர்ந்து நிற்கிறார். தற்போதும் படங்களின் வசூலில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவையும் தாண்டியும், ஜப்பானிலும் ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினி.

ரஜினி நடித்த முதல்படமான அபூர்வ ராகங்கள் படம் 1975ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானது. அப்படி பார்க்கையில் ரஜினி, சினிமாவிற்கு வந்து 39 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அவர் தனது 40ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது 63 வயதில், 40ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி, இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தில் நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி