செய்திகள்,திரையுலகம் விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன: அனிருத் தகவல்!…

விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன: அனிருத் தகவல்!…

விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன: அனிருத் தகவல்!… post thumbnail image
சென்னை:-விஜய், சமந்தா இருவரும் முதன் முறையாக இணைந்திருக்கும் படம் கத்தி.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தின் பஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இது ஆங்கில நாளிதழ் விளம்பரத்தின் காப்பி என இணையதளங்களில் கழுவி ஊத்தினர். இந்நிலையில் கத்தி படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என்று உசுப்பேத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். கத்தி படத்தின் பாடல்கள் பதிவு எல்லாமே கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

விஜய் சார் பாடவிருக்கும் பாடலும் ரெடியாகி விட்டது. அந்தப் பாடலின் பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். கத்தி பாடல்கள் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் ஆகலாம். இதற்கான தேதியை படக்குழுவினர் விரைவிலேயே அறிவிப்பார்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அனிருத் டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி