செய்திகள் சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 29 தொழிலாளர்கள் கதி?…

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 29 தொழிலாளர்கள் கதி?…

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 29 தொழிலாளர்கள் கதி?… post thumbnail image
பீஜிங்:-கிழக்கு சீனாவின் அன்ஹுயி மாகாணத்தின் ஹைனான் நகரத்தில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்து ஒன்றில் அங்கு பணிபுரிந்துவந்த 29 தொழிலாளர்கள் உயிருடன் மாட்டிக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.இவர்களில் பெரும்பான்மையானோர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது.

பத்து பேர் இந்த விபத்திலிருந்து தப்பித்துள்ளதாகவும் அதில் ஒருவருக்குக் காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது. விபத்து நடந்த செய்தியறிந்து மீட்புப் பணியாளர்கள் 30 பேர் சம்பவ இடத்தை அடைய முயற்சி செய்வதாகவும், அதற்கான மீட்பு இயந்திரங்கள் அங்கு வருவதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன.

சீனாவில் செயல்பட்டுவரும் பல சுரங்கங்கள் ஆபத்து நிறைந்தவை என்று குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், கடுமையான வேலை பாதுகாப்பு முறைகளை அமல்படுத்துவதன்மூலம் இந்த சுரங்கங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக அரசு தகவல்கள் தெரிவித்தன.குறிப்பிட்ட இந்த சுரங்கத்தையும் ஆபத்து கருதி மூடிவிடுமாறு கடந்த ஜூன் மாதமே அரசு இரண்டு முறை எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும் இது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளதாக பத்திரிக்கை தகவல்கள் கூறியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி