செய்திகள்,திரையுலகம் கிக் படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் அசத்தும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’!…

கிக் படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் அசத்தும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’!…

கிக் படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் அசத்தும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’!… post thumbnail image
மும்பை:-சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் அள்ளுகிறதாம். முதல் நாள் வசூல் மட்டுமே 32 கோடி ரூபாய் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014ல் இதுவரை வந்த படங்களிலேயே முதல் நாள் வசூலில் இந்தப் படம்தான் அதிகத் தொகையை வசூலித்துள்ளதாம்.

அஜய் தேவகன் நடித்து 2011ல் வெளிவந்த ‘சிங்கம்’ படத்தின் வசூலை விடவும், அவர் நடித்த முந்தைய படங்களின் வசூலையும் இந்த ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ முறியடித்துவிட்டதாம். சமீப காலத்தில் ஹிந்தியில் வெளியாகும் பெரிய ஹீரோக்களின் படங்கள் முதல் நாள் வசூலில் மட்டுமல்லாது தொடர்ந்து வசூலித்து 100 கோடி ரூபாயைத் தாண்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய் குமார் நடித்த ‘ஹாலிடே’, சல்மான் கான் நடித்த ‘கிக்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜய் தேவகன் நடித்துள்ள இந்த ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ படமும் 100 கோடி ரூபாய் வசூலை விரைவிலேயே தொட்டுவிடும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி