செய்திகள்,திரையுலகம் காமேஸ்வரி (2014) திரை விமர்சனம்…

காமேஸ்வரி (2014) திரை விமர்சனம்…

காமேஸ்வரி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் ஜிம்மி படித்து முடித்துவிட்டு எந்த வேலையும் கிடைக்காமல் நண்பர்களுடன் வசித்து வருகிறார். அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் இவர்களின் பலவீனத்தை புரிந்துகொண்ட அந்த ஊரின் தொழிலதிபரான புவனேஷ்வரி, இவர்களை வைத்து தனது திட்டத்தை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார்.அதன்படி, அவர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து மூன்று பெண்களை கடத்தவேண்டும் என்று சொல்கிறாள். அந்த வேலையை செய்துகொடுத்தால் நிறைய பணம் தருகிறேன் என்றும் சொல்கிறார்.

பணத்தின் மீதுள்ள ஆசையால் அந்த வேலையை செய்ய அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், நாயகனின் நண்பர்களில் ஒருவன் மட்டும் இந்த கடத்தல் வேலைக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறான். இருப்பினும் மற்ற நண்பர்களின் உதவியுடன் இந்த கடத்தலை செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்று முடிவெடுத்து, புவனேஷ்வரி சொன்ன மூன்று பெண்களையும் கடத்துகிறார்கள்.அந்த மூன்று பேரும் அதேஊரில் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள்கள். அவர்களில் ஒருவர்தான் நாயகி அம்ருதா. மயக்க மருந்து கொடுத்து அவர்களை காட்டுக்குள் கடத்திச் செல்கிறார்கள்.காட்டுக்குள் சென்றதும் அயர்ந்து தூங்கிவிடும் நாயகன் மற்றும் அவரின் நண்பர்களிடமிருந்து மூவரும் தப்பித்து செல்கிறார்கள். அவர்களை தேடி நாயகனும் நண்பர்களும் காட்டுக்குள் செல்கிறார்கள். காட்டுக்குள் அலைந்து திரிந்து கடைசியில் அவர்களை கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதால் திசை தெரியாமல் அல்லாடுகிறார்கள்.இறுதியில், அந்த காட்டில் இருந்து அனைவரும் வெளிவந்தார்களா? இவர்களை புவனேஷ்வரி கடத்தச் சொன்ன காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஜிம்மிக்கு நடிகருக்குண்டான முகம் இல்லை. நடிப்பிலும் மிளிரவில்லை. எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் இவரது பார்வையை புரிந்துகொள்ள முடியவில்லை. நாயகி அம்ருதவள்ளி அழகாக இருக்கிறார். படம் முழுக்க அரைகுறை ஆடையுடனே வலம்வருகிறார். இவருக்கு தங்கைகளாக வருபவர்களும் அதே அரைகுறை உடையுடனே வருகிறார்கள். இவர்கள் மூவரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஜிம்மியின் நண்பராக வரும் குண்டு மனிதர் காமெடிக்கு பொருந்துகிறார்.புவனேஷ்வரி வேடத்தில் வரும் பெண்மணி படத்தின் ஆரம்பத்தில் வில்லியாக சித்தரிக்கப்பட்டாலும், கடைசியில் நல்ல மனுஷியாக காட்டியிருப்பது சிறப்பு. நாயகன் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மனைவியாக நடித்திருப்பவர் கூடுதல் கவர்ச்சிக்காக திணிக்கப்பட்டிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு போரடித்திருக்காது என்றே சொல்லலாம்.

‘காமேஸ்வரி’ என்ற தலைப்பிற்கு சற்றும் பொருந்தாத கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் வம்சி. தலைப்பை வைத்தே ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோன்ற படங்களில் நெருக்கமான படுக்கையறை காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்கள், இந்த படத்தை பார்த்து சற்று ஏமாந்து போயிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். திரையரங்குகளில் ரசிகர்கள் ‘உச்’ கொட்டுவதிலிருந்தே அது தெரிகிறது.ராஜா இசையில் ஒரு பாடல் பரவாயில்லை. பின்னணி இசை மோசம். செல்வா ஒளிப்பதிவில் காட்டுக்குள் நடக்கும் காட்சிகளை படமாக்கியது அருமை.

மொத்தத்தில் ‘காமேஷ்வரி’ ஏமாற்றம்…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி