செய்திகள்,முதன்மை செய்திகள் ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் ஜூலியன் அசாஞ்சே!…

ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் ஜூலியன் அசாஞ்சே!…

ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் ஜூலியன் அசாஞ்சே!… post thumbnail image
புதுடெல்லி:-பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே மீது சுவீடனில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவரை கைது செய்து விசாரிக்க திட்டமிட்டதையடுத்து, அவர் 2012ம் ஆண்டு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு பாதுகாப்புடன் இருந்து வரும் அசாஞ்சே, விரைவில் அங்கிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளார். இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இத்தகவலை அவர் தெரிவித்தார். ஆனால், என்ன காரணத்திற்காக அங்கிருந்து செல்கிறார் என்று விரிவாக கூறவில்லை. அவருடன் ஈக்வடார் வெளியுறவு மந்திரி ரிச்சர்டோ பாட்டினோ உடனிருந்தார். நிலைமையை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அசாஞ்சேவுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க விரும்புகிறோம். அதேசமயம் அசாஞ்சேவின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு தீர்வு காண்பதற்காக பிரிட்டிஷ் மற்றும் ஸ்வீடன் அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்று ரிச்சர்டோ பாட்டினோ கூறினார்.

இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வரும் அசாஞ்சேவுக்கு உயர் ரத்த அழுத்தமும் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. எனவே, சிகிச்சைக்காக அவர் தூதரகத்தை விட்டு வெளியேற திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது.தூதரகத்தை விட்டு வெளியில் வந்தால் அசாஞ்சே கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி