செய்திகள்,திரையுலகம் ‘அஞ்சான்’ படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சி நீக்கம்!…

‘அஞ்சான்’ படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சி நீக்கம்!…

‘அஞ்சான்’ படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சி நீக்கம்!… post thumbnail image
சென்னை:-‘அஞ்சான்‘ படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடமாக இருந்ததை சுமார் 10 நிமிடங்கள் வரை குறைத்துள்ளார்கள். குறிப்பாக இடைவேளைக்குப் பின்னர் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இடம் பெறும் ஒரு கச்சேரிக் காட்சியை அப்படியே வெட்டி எறிந்திருக்கிறார்கள். அந்த காட்சி என்னவென்றால், சமந்தாவின் ஆசைப்படி அவரை பிரம்மானந்தத்தின் கச்சேரிக்கு சூர்யாவும், அவருடைய நண்பர் வித்யுத் ஜமாவலும் அழைத்துச் செல்கிறார்கள்.

ஆனால், அதற்குள் கச்சேரி முடிந்து விட, பிரம்மானந்தத்தை சமாதனப்படுத்தி திரும்பவும் பாட வைக்கிறார்கள். அவர் பாடிய விதத்தைக் கேட்டு, மூவருமே தெறித்து வெளியே ஓடி வருகிறார்கள். இந்தக் காட்சிதான் தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியான இரண்டு நாட்கள் இந்தக் காட்சி இடம் பெற்றிருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி