‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…

விளம்பரங்கள்

சென்னை:-ஏ.ஆர். ரகுமான் இசையைமப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காவியத் தலைவன்’. வசந்த பாலன் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பு ‘பாய்ஸ்’ நாடகக் கம்பெனிகள் போன்ற பல நாடகக் கம்பெனிகள் புகழ் பெற்று இருந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கவிஞர் வாலி, நா. முத்துக்குமார், பா.விஜய், ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். அருணகிரிநாதர் பாடல் ஒன்றும் படத்தில் இடம் பெற்றுள்ளது. வாலி எழுதிய ‘அல்லி அர்ஜுனா’ என்ற தலைப்பிட்டு மொத்தம் 8 சிறு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம்.ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள சில பாடல்களின் டீஸர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் தனி வரவேற்பைப் பெறும் என இசை ரசிகர்கள் கருதுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: